நிலவுக்குப் போவோம் நீவிர் வாரிரோ
நிலவுக்கு போவோம் நீவிர் வாரிரோ
நிலவுக்குப் போவோம் நீவிர் வாரிரோ
மூச்சைக் கொடுத்தவள்
மூக்கை அறுத்தோம்
உண்ணக் கொடுத்தாளைத்
தோண்டிக் கெடுத்தோம் ..
காடுமலை கழனியெல்லாம்
சமதளமாய் சறுக்கவைத்தோம்
நீலக் கடலிலே
நிலமும் செய்தோம்
மேடுபள்ளம் என்னில் பலவாம்
மேதைகளே நீவிர் வாரிரென
நாலுவருட சேவையைக் கோரி
நமைச்சுற்றி தேன்நிலா தேய்கிறது
சிவந்து செவ்வாயும் காத்திருக்கு-நம்
சமத்துவ சேவையை கேட்டிருக்கு..