மனதின் வார்த்தைகள் காதலில் -3

எத்தனை முறை விட்டு கொடுத்த போதும்
விட வில்லை காதல் என்னை
வலி அதிகரிக்கையில் விட சொல்லி கெஞ்சும் மனம்
எப்படி விட முடியும் காதலை
நான் நேசிக்கும் கவிதையை ....

சொல்லாத வலி மனதில்
யாரிடம் சொல்லி ஆறுதல் காண நான்
தாய்மடி தாரத்தில் எதிர்பார்ப்பது
அறிவின் தவறா மனதின் தவறா
இன்னும் உரு தெரியா ஆயிரம் கேள்விகள்

என்னவளே சீக்கிரம் வா
என் வாசல் தேடி
தொலைந்து விட போகிறேன் நான்
தொலைத்து விட போகிறேன்
என் உயிரான உன் காதலை

எழுதியவர் : ருத்ரன் (18-Jun-13, 2:26 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 129

மேலே