டெங்கூ.(கடி கவிதை)

(எச்சரிக்கை-இது நகைச்சுவைப் பதிவு.
யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல)

ஏழையின் இரத்தம்
எனக்கு இணிக்கும்
ஏனென்றால்
ஏழையின் சிரிப்பில்
இறைவன் இருக்கிறான்
என்று சொன்னார்
அறிஞர் அண்ணா...

ஆனால்

அந்தோ..பாவம்
அவன் இரத்தத்தை
அளவுக்கு மீறி
குடித்து விட்டார்கள்
அவர் வழி வந்த
அரசியல்வாதிகள்

இருக்கும்
கொஞ்ச ரத்தமும்
டாஸ்மாக் நாற்றம்

பணக்காரன் இரத்தமோ
அய்யோ...பாவம்
உயர் அழுத்தம்
உடல் முழுக்க
வியாதி நாற்றம்
விதவிதமான
மருந்து வாசம்

விதிவசத்தால்
ஒருவனைக் கடிக்க
என் உடம்பிலும்
கெட்ட இரத்தம்...
இறைவா!
இந்தத் தோஷத்தை
எங்கே தொலைப்பேன்..?

இரத்தத்தின் இரத்தம்
வழி வந்த அம்மா..
மின்சார வெட்டு
இல்லாமல் போனால்
எப்படித்தான்
நான் உயிர்வாழ்வது?

கோரிக்கையோடு
கோட்டைக்கு வந்தால்...
நான் எழுதியவை
டெங்கூ
கடி கவிதை என்று
அடிக்க வருகிறார்கள்
இது நியாயமா...?

அம்மா!...தாயே!
அம்மா உணவகத்தில்
இட்டலியும் தயிர்சாதமும்
போட்டால் போதுமா...?

ஆட்டுகால் பாயாவும்
ஆப்பமும் போட்டால்தானே
ஏழைகள் உடம்பில்
இரத்தம் ஊரும்
எங்கள் உயிரும்
இனிதே வாழும்..

இப்படியே
நீங்கள் தொடர்ந்தால்
நாங்களும்
சங்கம் வைப்போம்
போராடுவோம்.........

வேண்டும் வேண்டும்
எங்களுக்கும் வேண்டும்
விலையில்லா இரத்தம் வேண்டும்

(இதை யாராவது காப்பி குடிச்சீங்க..ச்சீ...அடிச்சீங்க...
அப்புறம் உங்களையும் கடிச்சிபுடுவேன்)

எழுதியவர் : பரிதி.முத்துராசன் (18-Jun-13, 2:29 pm)
பார்வை : 111

சிறந்த கவிதைகள்

மேலே