அரிதாரம்...!
![](https://eluthu.com/images/loading.gif)
யாரோ பேசியதை
திரும்ப நான் யாரிடமோ
பேசுகிறேன்...!
எல்லோருக்கும் பிடித்த
ஒரு இசையை
வலுக்கட்டாயமாய்
எனக்குப் பிடித்ததாய் கொண்டு
மீண்டும் மீண்டும் கேட்கிறேன்!
மிகைப்பட்ட சரிகளின்
பக்கம் தவறென்றாலும்
சாய்ந்து, குறையாயிருக்கும்
சரிகளை தவறென்கிறேன்!
யார் யாரோ ஏதேதோ சொல்ல
கேட்டு கேட்டு...
என் சுயம் தொலைந்து
அரிதாரப் பூச்சுக்களுக்குள்
என் அடையாளம் அழிந்து...
தொலைந்தே விட்டேன் நான்...!!!