உனக்காகவே..........

உன் தேடலில் கிடைக்காத உறவாக
நீ என்னை பார்த்ததும்,
என் தேடலில் கிடைக்காத உறவாக
நான் உன்னை பார்த்ததும்,
நம் தவறல்லவே!
எனக்கான எல்லா உறவாக
நீ இருக்கின்றாய்..
உனக்கான எல்லா உறவாக
நான் இருக்கவே ஆசை..
அன்பு ஒன்றுதான் நமக்குள் ஆதாரம்..
உன் அன்பான பார்வைகளும்,
நேசமான புன்னகைகளும்,
பாசமான வார்த்தைகளும்,
என் நெஞ்சுக்குள் என்றும்..
எனதாசைகள் அடுத்த பிறவியாகிப்போகட்டும்
உனதாசைகள் இந்த பிறவியில் நிறைவேறட்டும்..
நான் தீயவனெனில்,
என்னை தொடர்ந்து இப்படியே
தண்டித்துக்கொண்டே இரு..
நான் நல்லவனெனில்,
என்னை மன்னித்து
உன் அன்பினில் கரையவிடு..