வாடுதென் உயிர்ப்பூ

சிந்தையில் சிரிப்பவளே...

செந்நீரை எரிப்பவளே...

என்னுயிரை உருக்குலைத்து

உன்னிழலை தொடரவைத்த

அந்தியில் உனைக்கான

அஷ்டம சூரியனை

அடம்பிடித்து நிறுத்திவைத்தேன்

வட்ட நிலா காணாத அந்திமல்லி -தன்

மொட்டவிழ்ந்து நறுமணம் வீசாது

வட்டமிட்டு வலிந்தும் உனைக்காணாது

வாட்டமுற்ற என்மனம் உறங்காது

தழுவிய தென்றலைத் தேடுது நறுமணப்பூ

உன்

தரிசனம் காணமல் வாடுதென் உயிர்ப்பூ

எழுதியவர் : காசி.தங்கராசு (19-Jun-13, 2:01 am)
பார்வை : 103

மேலே