காதல் வாலிபத்தின் வம்பு
காதலுக்கு இல்லையொரு ஜாதி
காதலர்க்கு இதுதானே நீதி
..ஆதலினால் காதலித்து
..ஆசையினால் கரம்பிடித்து
பேதலிப்போர் வாழ்க்கையொரு பீதி.
வருமானம் இல்லாதக் காதல்
வசந்தத்தை காணாமல் போதல்
..தருகின்ற பாடத்தை
..தவறாமல் கற்றிட்டால்
பெறுமானம் ஆகிவிடும் ஈதல்.
வயிற்றுக்கு முன்னாலே தோன்றும்
வளமான அன்புக்கு என்றும்
..கயிற்றுக்குள் சிக்கிட்ட
..கழுத்துக்கு நிகராக
உயிருக்கு உலைவைக்கத் தூண்டும்
கண்டவுடன் முளைக்கின்ற அன்பு
காதலெலாம் வாலிபத்தின் வம்பு
..என்றுணர்ந்து கொள்கின்ற
..இளவயது மனமொன்றே
பண்புடனே வாழுமிதை நம்பு