எப்படி சொல்வது ?

உனக்காக ஏங்கிய நாட்களை
எப்படி அம்மா சொல்வது ??

தூரம் நின்று ரசிக்க வைத்ததற்காகவா
இன்று நீ தூரத்தில்...
எப்படி அம்மா சொல்வது ?

தெருக்கோடியில் விளையாடிய என்னை
தர தர வென இழுத்து வந்து
தலையில் எண்ணை தடவிய உன்னை
உதறிவிட்டு ஓடி போனேன் ...
எப்படி அம்மா சொல்வது
உனது விரல் பட்ட ஒரு துளி எண்ணைக்காக
தவம் கிடப்பதை....

"தொன தொனனு ஏம்மா
எப்ப பாரு தொல்லை பண்ற " னு
கோபமாக முறைத்துகொண்டேன்,
எப்படி அம்மா சொல்வது ?
உனது அழைப்பு மணி வரும் என்று
கை பேசியே பார்த்துகொண்டிருப்பதை..

விரல் விட்டு எண்ணி விடலாம்
நீ என்னை திட்டிய நாள்களை,
எப்படி அம்மா சொல்வது?
தினம் தினம் வசைபாடும் உயர் அதிகாரியின்
திட்டுக்களை எல்லாம் சொரணை கெட்டு
கைகட்டி கேட்டுக்கொண்டிருப்பதை ..

உறங்கி கொண்டிருந்த காலை வேளையில்
காபி கொடுக்க எழுப்பிய உன்னை
எதனை முறை "சீ போ மா " என்றேன் ..
எப்படி அம்மா சொல்வது?
முகம் தெரியாத தொலைபேசி வாடிகையளர்களிடம்
காலை வணக்கம் சொல்லி சொல்லியே
குரல் நமத்து போனதை...


கடை கடையாக ஏறி இறங்கி
உனக்காக ஒரு புடவை வாங்கிய சேதியை
உணர்ச்சி வசப்பட்டு சொல்வதற்கு முன்பே
எப்படி அம்மா தெரிந்தது?
"கண்ணு உனக்கு ஒரு சட்டை வாங்கினேன்
வந்து போகும்போது எடுத்துக்கோ " என்று சொல்லி
வாயை அடைத்து விடுகிறாய் ...

உனக்காக ஏங்கிய நாட்களை
எப்படி அம்மா சொல்வது?

உயிரற்ற எந்த பொருளும்
உனக்காக இங்கு இருந்து கொண்டு வந்து என்ன பயன் அம்மா?
இதயம் முழுதும் பாசத்தை தாங்கியபடி
இப்பொழுதும் கேட்கிறாய்
" சனிக்கிழமை எண்ணை தேச்சு குளி கண்ணு"
" வேல வேளைக்கு சாப்டு கண்ணு "
"மழையில நனையாம இருப்பா"
எப்படி அம்மா சொல்வது?
உனக்காக ஏங்கிய நாட்களை...

மறு ஜென்மம் வேண்டாம் என்கிறேன் கடவுளிடம்
உனது காலடி ரேகையாக உருமாறும் வரம் மட்டும் போதும்..

எழுதியவர் : சாம்ராஜ் (19-Jun-13, 7:26 pm)
சேர்த்தது : shyamraji
பார்வை : 80

மேலே