அழுதழுது சாகிறேன்

மழை பொழியும் பொழுதுகளில்
மனதோரம் .....!!
ஜன்னல் கம்பிகளில்
சாரல் தெறிக்கும்
உணர்வு வந்து
மெல்லமாய் எட்டிப் பார்த்து - உன்
நினைவுகள் எனும் நீர் அலைகளால் வருடிச்செல்கிறது

என் உறங்காத இரவுகளின்
கனவுகளையெல்லாம்
திருடிச்செல்கிறது

கண் மூடும் பொழுதுகளில்
இமைகளின் இடுக்கில் - நீ
வந்து நின்று கொண்டு
ஏதேதோ சொல்லி என் இதயத்தை
குழப்பி உன் நினைவில்
தினம் நீந்தவைக்கிறாய்
என்னை கண் விழித்துக்
காக்க வைக்கிறாய்

போதுமடி நீ செய்யும் சலனம்
சுகமாக வலிக்கிறது இதயம்
ஆனாலும் அந்த நொடிகளில் கூட
அருகில் நீ இல்லை என்பதால்
ஏற்றுக் கொள்ள மறுக்குமிதயம்
ரணங்களை மூட்டை கட்டிக்கொண்டு
அழுதழுது சாகிறது ........

எழுதியவர் : சஹானா ஜிப்ரி (19-Jun-13, 9:39 pm)
சேர்த்தது : ரோஷானா ஜிப்ரி
பார்வை : 90

மேலே