அர்த்த நாரீஸ்வரர்.....!!!!

சக்தி அது சரி பாதி
சமயோசித புத்தி பாதி - என

அழகாக இறைவா நீ
அர்த்த நாரீஸ்வரியாய் காட்சி தந்தாய்....!!!

புரிந்து வாழ்வதே இன்பம் என்றாய் - அதை
பூரித்தே மணமக்கள் கேட்டார்....!!!

ஆஹா என்ன இன்பம் !!!
அவனியிலே இல்லறம் சொர்க்கம்....!!!

அகம் மகிழ்ந்து நானும்
அண்ணாந்து பார்க்கின்றேன்.........

நெடிதுயர்ந்த நீதி மன்றம் - வாசலில்
நீண்டதாக ஒரு க்யூ.........

எதற்க்காக இந்த க்யூ என்று விசாரிக்கையில்
டைவர்சுக்கு அப்ளை செய்தவர்கள் என்றனர்..

அர்த்த நாரீஸ்வரா
அட நீ எங்கே போனாய்.....?!!!!!

பார்வதி....! பரமேஸ்வரா..!!!

அம்மா நீ அந்தப் பக்கம்
அப்பா நீ இந்தப் பக்கமா ?

அது சரி அது சரி....!!!

சரீர சுகம் கண்டே - மனம்
சந்தோசம் தொலைத்தது.....!!!

சகலமும் அடங்கிய பின்னே - இறைவா உன்னை
சரணாகதி அடைந்தது.....!!!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (20-Jun-13, 6:54 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 147

மேலே