சீதை தேடும் ராமன்

எனது வில்லிற்கு வினையூட்டும்
அந்த வில்லாளன் எப்போதும்
என் தேடலில் கண்ணாமூச்சி
காட்டி கொண்டே இருக்கிறான்...

அவனது முதல் பார்வையில்
நான் முறிந்துவிட வேண்டும்!
அவன் முறிக்கும் முன்னே...

எனது ஒற்றை பார்வையில்
அவன் வீழ்ந்திட வேண்டும்!
காலகணக்கில் காத்திருக்கும் பெண்மையை
அவன் காலடியில் சேர்த்திடவேண்டும் .

தோழமைகளில் அவன் உயர்திருவாக
வேண்டும்! என் தோல்
தொடுகையில் அவன் மயிலாக
வேண்டும்! என் கேசங்களில்
அவன் சிறை படவேண்டும்!
சிணுங்கல்களில் கொஞ்சம் வதைபடவேண்டும் !

என் இமைகோடுகளில் அவன்
இதழ் கவி பாடவேண்டும்!
அவன் முக தோட்டத்து
முள் படுக்கையில் தினம்
துயிலுரிக்க வேண்டும்!

அவன் பாதங்களுக்கு நான்
பணிவிடை செய்யணும் தூசுகளையும்
என் தோலில் சுமக்கனும்!
அகலிகை எவளும் அபகரித்தலாகாது!

கானகம் சேர்கையிலும் நான்
களித்திருப்பேன்! அவன் காலடியிலேயே
பயணித்திருப்பேன்! மான்கள் எதுவும்
வேண்டாம் சில மீன்கள் தந்தாலே
போதும்!!!

கனவு கோடுகளிலும் கால்
கடுக்கிறது கண்ணாளானே!
விரைந்து வா முடிந்தால்
கொஞ்சம் பறந்து வா !!!

எழுதியவர் : சுபகூரிமகேஸ்வரன் (எ) skmaheshwaran (20-Jun-13, 1:36 pm)
பார்வை : 1482

மேலே