லிமரைக்கூ

எல்லாவற்றையும் தாங்கும் கடல்
எதையும் தடையின்றி கொடுக்கும்
என்னதான் செய்துவிடுமோ கப்பல் ...!

அன்ன நடை பயின்று வளருகிறது
தத்தித் தத்தி நடை பயிலும் குழந்தை கண்டு
காலில் கிடக்கும் தங்கமும் ஒளிருகிறது !

கலங்கித்தான் மணர் பூ விசிருகிறது
கண்டும் காணாமலும் ஆற்றைத்தாண்டியும்
பழகித்தான் அரும்பு பிசிறுகிறது ..!

மின்னல் காற்றுக்குத் தூது விடுகிறது
மேகத்திற்கு வியர்க்கும் என்று
மரம் சட்டையைப் பரப்பி விரிகிறது..!

கற்பனை சிறகை காற்றில் ஓட்டினேன்
வான் முழுதும் தேடித் தொலைத்து
சிலை செய்து சுவற்றில் மாட்டினேன்...!

(லிமரைகூ வடிவம் )

எழுதியவர் : தயா (20-Jun-13, 3:38 pm)
பார்வை : 123

மேலே