சென்ரியு-கேஎஸ்கலை
நான் நாளைய மருத்துவன்
அப்பா இன்றே நோயாளி
நுழைவுக் கட்டணம் !
=--=
மின்வெட்டு
எல்லா உற்பத்தியும் வீழ்ச்சி
சனத்தொகை வளர்ச்சி !
=--=
பிச்சைக் காரன்
சில்லறைச் சத்தமில்லை
பணவீக்கம் !
=--=
மாணவர்கள்
தவறாது படிக்கிறார்கள்
முகப் புத்தகம் !
=--=
நுளம்புக் கடி
எய்ட்ஸ் தொற்றியது
நுளம்பிற்கு !
=--=
எந்தப் பழமும் புளிக்காது
ஏணிப்படியோடு நரிக்கூட்டம்
அரசியலில் !
----------
சென்ரியு என்ற வடிவில் நான் எழுதும் முதல் படைப்பு இது...சென்ரியு இலக்கணம் மீறப்பட்டிருந்தால் சுட்டிக் காட்டுங்கள் தெரிந்தவர்கள் !