சோலையாய் பூக்கிறாள் பூமீ

கருத்த பசங்க கூட்டம் சேர

இருட்டிப் போச்சு எல்லாப் பக்கமும்

செவத்தப் பொண்ணோட சேரத் துடிச்சு

அத்தனை பேரும் கரைஞ்சு உருகி

சண்ட போட்ட சத்தம் -அதுதான்

அண்டம் அதிரும் இடி முழக்கம்...

சேரத் துடிச்சவன்

சேறாய் கா(மா)ய்ஞ்சாலும் -பசுஞ்

சோலையாய் பூக்கிறாள் பூமீ

கரைஞ்ச மேகங்களின்

கல்லறைகள் மீது ....

எழுதியவர் : காசி.தங்கராசு (19-Jun-13, 3:09 am)
பார்வை : 124

மேலே