குறும்புகள் ஆயிரம் 19

குழந்தை ; தாத்தா ! கதை சொல்லுங்க !
தாத்தா ;என்ன கதை சொல்ல...அங்க பார் மரத்துல..
குழந்தை; புறா ..வெள்ளையா இல்ல இருக்கும் கருப்பா இருக்கு..
தாத்தா ; அது புறா இல்ல ...காக்கா ம்மா !
குழந்தை ;சரி காக்கா கதை சொல்லுங்க ..
தாத்தா;ஒரு காக்கா கூடு கட்டி வாழ்ந்ததாம் ..வெயில் காலம் வந்ததும் அதற்கு தாகம் எடுத்ததாம் ..
குழந்தை ; ஐயோ! பாவம் ..அப்புறம் தாத்தா ..
தாத்தா ;ஒரு மரத்தடியில் ஒரு பானையில கொஞ்சம் தண்ணீ இருந்ததாம் ..எட்டிப் பார்த்த காக்கா குதிச்சு குதிச்சு பார்த்ததாம் ..அதால தண்ணீ குடிக்க முடியல ..
குழந்தை ; அப்புறம் என்னாச்சு !
தாத்தா ; அது பறந்து பொய் ஒவ்வொரு கூழாங் கல்லா போட்டுதாம்.. தண்ணீ மேல வர வர ....அது பானை மேல உட்கார்ந்து தண்ணீய குடிச்சிடுச்சு....
குழந்தை ;;உடனே ...தடுத்து... இருங்க தாத்தா மீதிய நா சொல்றேன்..
தாத்தா;; ம் ம் ம்
குழந்தை ; ஏன் தாத்தா.. கூழாங்கல்லை போடுறதுக்கு பதிலா ஸ்ட்ரா (straw )போட்டு உறிஞ்சி குடிக்கலாமே காக்கா ..
தாத்தா ...?????

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (21-Jun-13, 10:47 am)
பார்வை : 436

மேலே