அரசியல் ஜோக்ஸ் ...
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை தனியார்
துறைளிலும் கொண்டு வருவோம் என்பதை இந்த வேளையில் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
***************
தலைவர் ஓவரா தண்ணி அடிச்சுட்டு ஆக்டோபஸ் ஜோசியம் பார்க்கப் போனது தப்பாப் போச்சா... ஏன்?
ஆக்டோபஸ்னு சொல்லிட்டு, ஒரு நண்டை வச்சு தலைவருக்கு ஜோசியம் சொல்லிட்டாங்களாம்..
********************
‘‘தலைவர் ‘ஐபிஎல்’ல பத்தியெல்லாம் பேசுறாரே?’’‘‘ஆமாம்... அதப் படிச்
சுட்டா, வக்கீலாகலாமான்னு கேட்குறார்!’’
***************
‘‘தலைவரே... திடீர்னு எதுக்கு இப்ப கட்சி மாறμம்ங்கறீங்க?’’‘‘எதிர்க்கட்சியில ஒரு அழகான
ஃபிகர், மகளிர் அணித் தலைவியா ஆகியிருக்காம்யா..!’’
****************
தலைவர் இன்னும் பழசை மறக்கலையா... எப்படிச் சொல்றீங்க? மைக்கை பார்த்தவுடனே டக்குனு எழுந்து, மைக் டெஸ்டிங்! ஒன், டூ, த்ரிஷா,செவன், எளிணிட் , நயன்தாரா’ன்னு டெஸ்ட் பண்றாரு!
*******************
தலைவர் டென்ஷன்ல இருக்காரே... ஏன்?’’
‘‘எவனோ, ‘தென்னகத்து திவாரியே வருக! ன்னு தலைவரை வரவேற்று போஸ்டர் அடிச்சு ஒட்டிட்டானாம்... அதான்!’’
************************
"அந்த கட்சில உமக்கு கொள்கை பரப்புச் செயலாளர் பதவி கொடுத்துருக்காங்களே... என்ன வேலையாம்?" "கட்சியோட கொள்கை என்னன்னு கண்டுபிடிச்சி அதைப் பரப்பணுமாம்!"
*******************
"என் தியானத்துக்கு மான் தோல் வாங்கியதில் ஏதோ ஊழல் நடந்திருக்குமோ அமைச்சரே!" "ஏன் சந்தேகம் மன்னா?" "சொறிநாய்த் தோலில் வண்ணம் தீட்டி ஏமாற்றி விட்டார்களோ.......உட்காரும் இடம் அரிக்கிறதே அமைச்சரே!"
********************
"நம் நாட்டில் ஏற்பட்டுள்ள பஞ்சம் பறவைகளைக்கூட பாதித்திருக்கிறது மன்னா!" “எதைப்பார்த்துச் சொல்கிறீர் அமைச்சரே?" "அண்டை நாட்டுக்கு நாம் ஓலை கொடுத்து அனுப்பிய புறா, அந்த ஓலையை ஒரு மரத்தில் வைத்துத் தின்றுகொண்டிருக்கிறதாம் மன்னா!"
*************************
மன்னர் ஜோக்ஸ் (மன்னரும், அமைச்சரும்) "போர் முரசு ஒலிகேட்கிறதே......! எதிரி படையெடுத்து வந்துவிட்டானோ அமைச்சரே?" "அஞ்சாதீர்கள் மன்னா! .......மகராணியார் உள்ளே மிருதங்கம் பழகிக்கொண்டிருக்கிறார்கள்!"
***********************
நட்புடன் முழுமுதலோன்