(21)தந்திர காட்டில் நான் (3) குகை நோக்கிய பயணம்
.........................(3) குகை நோக்கிய பயணம்..............
************************(தொடர்ச்சி )************************
விதியற்ற விடியல்
என்று விடியும்
தெரியுமா ?
====விண்மீன்களின்
மௌனத்தை ரசிக்கும்
போதுதான் .....
வினையற்ற பொழுது
என்று கழியும்
தெரியுமா ?
=====விழிப்புணர்ச்சியோடு
வாழ்வை அணுகிடும்
போதுதான் .....
இப்படி பல இரவுகள்
பல பொழுதுகள்
எனது பயணத்தில்
இந்த பயணம்,
என்னை தொடர்கிறதா
அல்லது நான் தொடர்கிறேனா
யாருக்கு வேண்டும் இந்த
வெட்டி விமர்சனம்
நான் தொடர்ந்தால் என்ன ....
அது தொடர்ந்தால் என்ன ...
சுகமான பயணம்தானே
முக்கியம் ?
அது ,
இங்கு ஏராளம் -ஏராளம் !!!!
எவ்வளவு விஷயங்கள்
எத்தனை விசேஷங்கள்
கணத்துக்கு கணம் விசேஷம்தான்
காரிருள் சூழ்கிறது
அப்படியே புதிய காட்சி
அவ்வளவு பெரிய நிசப்தம்
குளிர்ச்சியும் நிறைகிறது
விண்மீன்களும்
வானிலவும்
முத்தமிடிகிறது
வசந்த காலம் தினம் தினம்.....
சௌந்தரியம் நாளுக்கு நாள்
மெருகேறுகிறதே அது
எனது மனதிலா?
பயணத்திலா?
அல்லது இந்த காட்டிலா ?
*****************************(தொடரும் )***************************
அன்புடன்
கார்த்திக்

