.............நிஜம் தொலைத்து..........

நிறம் பிரிக்கமுடியாத நிஜங்கள் !
நீ எனக்கு தந்த அனுபவங்கள் !
அழகு அறிவு அடர்த்தி ஆளுமை,
என எல்லாம் அறையப்பட்டிருந்தது,
அந்த அற்புதச்சிலுவையில் !
எனக்குத்தான் அதை நிரந்தரமாய்,
தூக்கிச்சுமக்க வழியில்லாமல்போனது !
காதலே !
நீ என்னை காததூரம் எறிந்ததால் !!
ஆனாலும் என்ன,
நான் மண்டியிட்டு தயார்நிலையில் !
நீ பாரம் சுமத்தும் நாளுக்கு !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (21-Jun-13, 8:00 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 82

மேலே