நவீன ஏழை

வங்கிக்கடனில் உறைவிடம்..

தவணையில் முழுமைபெறும் அறை..

சாயம் பூசிய சந்தோஷ வாழ்க்கை..!!

வானிலை மாற்றமோ என்னவோ..??

சாயம் கரைந்து திரை கிழிய..

வாகன சலசலப்புக்கு செவிடன்..

சாலைபெண்களின் வண்ணத்திற்கு குருடன்..

கண்களும் காதும்,

மட்டைப் பந்துடன் நாளை மறந்த சிறுவர்களிடம்..

காற்று மேதுண்டு தாடியும் கலையும் வேளை,

விநாடிகால்களின் ஓட்டத்தை,

நிறுத்தவும் மனமில்லை; திருப்பவும் வழியில்லை..!!

பெருமூச்சுடன், "நான் ஏன் கடவுளா பொறந்திருக்கக் கூடாது???"

#பொறுப்பு-கட்டாயப் பிணி#

எழுதியவர் : கார்த்திக் சு (22-Jun-13, 3:03 am)
பார்வை : 93

மேலே