தொடரும் அவதாரங்கள்
இரவிலும் உழைக்க
மனிதன் விரும்ப
தாமஸ் ஆல்வா எடிசனாக
அவதாரம்
அடிமை மனிதனை
மனிதனிடம் இருந்து விடுவிக்க
காந்தியாக அவதாரம்
அழுகிய மனிதனுக்கும்
அன்பு காட்ட
அண்ணை தெரசாவாக
ஒரு அவதாரம்
குழந்தையும் கணினி
இயக்க
பில் கேட்ஸ்
அவதாரம்