பெண்மையின் வலி
வலியினை மட்டும் சுமக்க என்று
சமைத்துவிட்டான் பெண்மையை
ஆயிரம் வலிகள் சிலுவையாய் சுமந்திட்டாள்
சுமைக்கலாம் விமோசனம் என
காதலினை எண்ணிவிட்டாள் பேதை
இத்தனை துன்பத்தையும் சுமந்திட்டவள்
அவன் இடம் நாட
அவனின் அன்பு செயலெல்லாம் இவளின் பெண்மைக்காக மட்டுமே
என்றறியும் போது மரணத்தின் வலி கூட
அறிந்திடுவாள் ......
உண்மை காதலை சுமக்கும் பெண்ணுக்கெல்லாம்
ஆணின் உயரிய பரிசு