வேண்டுமடா செல்லமே !

வயிற்றுக்குள்ளிருந்து
வட்ட மிட்ட - உன்
கால்கள் இனி பூமியை த்
தொடப்போகிறது !

என் மூச்சை மட்டும்
வாங்கிகொண்டு என்னுயிரில்
பாதியாய் இருந்த நீ
தனி உயிராய் மூச்சு
கொள்ளப்போகிறாய்

கருமை நிறத்தை
மட்டுமே கண்ட நீ
பல வண்ணங்களை கண்டு
களிப்படையப்போகிறாய்

ஆகாயம் சூரியன்
மழை நிலவு தென்றல்
இன்பம் துன்பம் என இன்னும்
பல அற்புதங்களை
அனுபவிக்கபோகிறாய்

கரு , சிசு எனப்
பெயர் கொண்ட நீ
மகன் மகள் என ஏதேனும்
ஒன்றை மட்டுமே
சூட்டிகொள்ளபோகிறாய்

உனக்கு பசித்திருந்தாலும்
நான் உன்னும் உணவில்தான்
உன் பசியாறும் என்ற
நிலை மாறப்போகிறது
உனக்கு முழு சுதந்திரம்
கிடைக்கப்போகிறது

வயிற்றுக்குள் உன்னை
அடைத்து வைத்து
தொப்புள் கொடியால் கட்டி வைத்த
எனக்கு நீ என்ன
தண்டனை தரப்போகிறாய் !

இந்த தாயின்
பாச முகத்தைக் காண
கத்தியின் உதவியால்
வயிற்றை க் கிழித்து வந்துவிடாதே
கர்ப்ப வலியோடு
பிறப்பு வலியும் எனக்கு
வேண்டுமடா செல்லமே !
பிறப்பு வழியே வந்து விடுவாயா செல்லமே ....

எழுதியவர் : அகரா (23-Jun-13, 9:57 pm)
சேர்த்தது : agaraa
பார்வை : 60

மேலே