லிமரைக்கூ: அமரர் ஊர்தியில் அண்ணாரின் புறப்பாடு ...

அழகாய் நெளிந்து புன்னகைத்த ஆறு

ஆண்டவன் கோட்டையை அசைக்குதுப் பாரு

அதுபோல் தமிழனென் வீறெனக் கூறு...



சேற்றோடு சிவக்க கரையிற மேகம்

செந்தமிழ் கவியாய் பொழியும் தருணம்

சேரத் துடிக்கும் மனங்களில் மோகம் .....



உயரப் பறக்குது வெளியூர்க் கோழி

அயர்ந்து உழைத்தவன் அடுப்பினில் பூனை

பன்னாட்டுச் சந்தையே நீவாழிய நீடூழி ....



ஆட்டம் கண்டவன் ஆள்வது சுடுகாடு

ஓட்டம் பிடித்து ஓடுவது கண்கூடு -ஆம்

அமரர் ஊர்தியில் அண்ணாரின் புறப்பாடு ...

எழுதியவர் : காசி.தங்கராசு (24-Jun-13, 2:39 am)
பார்வை : 138

மேலே