இவர்களும் மனிதர்கள்தானே...

செத்தும்
வாழ்கின்ற மனிதர்களாய்
சேரியில் மக்கள்...

செல்வம்
கொழிக்கின்ற செல்வரெல்லாம்
இவர்களின் பிச்சை...

அரைவயிறு
அரையுணவு =இவர்களுக்கு
அவலத்தில் வாழ்வு....

ஆசைகளை கொன்று
ஆதிக்கம் வெறுத்து =இவர்களுக்கு
அன்பால் மனது...

உழைக்கமட்டும்
கற்றுகொண்டு =இவர்கள்
புரட்சி செய்யும்
ஊமைகள்...

உள்நாட்டு
உறவுகளால் =இவர்கள்
ஊனமான அகதிகள்...

இன்னல்கள்
அத்துனையும் =இவர்களிடம்
சக்தி இழக்கின்றன...

கோயில்களை
இவர்களே கட்டுவதால்
நுழைய தடுக்கையில் =இவர்கள்
தடுமாறுவதில்லை....

குளங்களை
இவர்களே வெட்டுவதால்
குடிக்க தடுக்கையில் =இவர்கள்
குமுறுவதில்லை.....

கூத்துகளும்
வித்தைகளும் =இவர்கள்
ஆதரவால்தான்
அனாதையாகவில்லை....

இவர்களும்
மனிதர்கள்தானே =ஏன்
இவர்கள்
மதிக்கப்படுவதேயில்லை......

//////////////////////////////////////////////////////////////////////

எழுதியவர் : பாசகுமார் (25-Jun-13, 8:31 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 72

மேலே