விலைமகள்..
வக்கிரர்கள்
அமைத்துகொண்ட
வடிகால்கள்...
வயதுக்கு
வந்தமுதல்,
வயதேறா
வினோதினிகள்....
வறுமையின்
கைகளில்,
பெண்மையை
கொடுத்தவர்கள்....
கற்பை வேண்டாமென்று
கடவுளுக்கு
கடிதமெழுதிய=நிரந்திர
கன்னியர்கள்....
வேதனையை உருக்கி
புன்னகையாய் வார்க்கும்
முழுநேர
பணியாளர்கள்....
நகக்குறி காயங்களின்
நீங்காத வலிகளோடு
அடுத்த வண்முறைக்கு
அழகாய் தயாராகும்
அதிசயங்கள்.....
அரசியல் மனிதர்களின்
மேடையில்
முட்கள்...
மெத்தையில்
மலர்கள்....
மனைவியை
குறைசொல்லி=பெண்னை
மரமென்று நினைப்போரின்
கண்ணீர்விடும் மடிகள்....
ராத்திரி பொழுதுகளின்
ரப்பராய்
உடல்தரிக்கும்
ரம்பைகள்.....
வாய்மொழி
மொளணித்ததால்
உடல்மொழி
கற்ற ஊர்வசிகள்....
வாழ்க்கை
கறையுடைந்ததில்
கற்ப்புக்குள்
வயிறு வைத்தவர்கள்....
================