மழலை !
மழலை !
இல்லற வாழ்வின்
இலக்கிய பரிசு !
சொல்லா சுகங்களை
சுருக்கி செதுக்கிய
சித்திரம் !
நீ
இறந்தகால தேடல் !
நிகழ்கால இன்பம் !
எதிர்கால கனவு !
இலக்கணம் இன்றி
சிறக்கும் மொழி - உந்தன்
மந்திரமொழி என்னும்
மழலை மொழியன்டோ !
உன்
ஒரு சுவைக்கு
அறுசுவையும் தோற்கும்
அற்புதம் !
குழலும் யாழும்
நீயில்லாத இடத்தில்
ஒலிப்பதே சிறப்பு !
உன்
பிஞ்சு விரல்
நெஞ்சில்பட
வையகம் சுருங்குது !
உன்னை பார்த்த
பூக்களும்
விருப்புடன் மடிகின்டன
சிரிப்பதற்கு நீ
இருக்கிறாய் என்று !
நீ
எந்தன் இன்னொரு நிஜம் !
நீ
பெற்றோர் பட்டத்தை
எமக்களித்தாய் - என்னை
மதியாதார் பட்டமெல்லாம்
வெறும் பட்டமே என்னும்
வேதத்தையும் விதைத்தாய் !
எல்லா வேதமும்
உன்னை ஏற்கும் - நீயோ
பொது வேதம் !!
"உங்கள்
மனம் மழலையென மாறாதவரை
தேவனின் பரலோகம் செல்லமாட்டீர் "!
என்னும் வேத வாக்கு
மாட்சிக்கு சாட்சி உனக்கு !
நீ
எதுகை மோனை
எட்டிபார்க்கும்
குட்டிக்கவிதை ! என்
சுட்டிக்கவிதை !!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
