டேய்! நண்பா!(தாரகை)

நேசித்தவர்களை
வெறுக்க முடியுமா?
வெறுத்துவிட்டால்
அது உண்மை நேசமாகுமா?

தவறு செய்தால்
தட்டிக் கேட்கலாம்.
உறவே வேண்டாமென
வெட்டிச் செல்லலாகுமா?

கோபத்திலே திட்டி பேசலாம்.
பேசாமல் மூச்சு திணற வைக்கலாமா?

காத்திருந்தாயோ
காரணம் தேடி
சாக்கு கிடைத்ததும்
சறுக்கிக் கொண்டு சென்றாயோ?

உயிரோடு மரணவலி சாத்தியமா?
சாத்தியமே என சொல்லாமல்
செய்து காட்டுகிறாய்
உன் பிரிவால்.

என் நேசம் உண்மையென்றால்
எனை நம்பிவிடு.
உன் நேசம் உண்மையென்றால்
எனை மன்னித்துவிடு.

மறந்துமட்டும் விடாதே.
மறந்தும் விட்டுவிடாதே.

இழந்த உறவுகளை மீட்க முடியுமா?
இருக்கும் உறவை ஏன் உதறிச் செல்கிறாய்?

இதுதான் இந்த கலிகாலத்தில்
உண்மையான அன்பிற்கு
கிடைக்கும் வெகுமதியோ?
அதற்கு நீயும் அனுமதியோ?
எனை வதைப்பது மதியோ?
இதுதான் நம் விதியோ?

எனது ஏக்கப் பெருமூச்சில்
குளிர்காயாதே.
அது உணர்த்திவிடும்
உன் நேசம் குறைஎன்று.

எனது புலம்பலில்
கலங்கி விடாதே.
என் அன்பு சிறுத்துப் போகும்.

இருவரில் ஒருவரின் அன்பாவது
உண்மையென்றால்
காலம் சேர்த்துவிடும்
நமை மீண்டும் நண்பர்களாய்.

நம்பிக்கையுடன்
உன் தோழி
தாரகை.:)

எழுதியவர் : தாரகை (26-Jun-13, 11:20 am)
பார்வை : 255

மேலே