வாழ்த்துவோம் வாரிசுகளை
சீருடை அணிந்து சீரான நடை
சின்னஞ் சிறார்களின் அழகிய நடை !
மழை ஆனாலும் மாறாத மனம்
குடை தாங்கிச் செல்லும் வேகம் !
அறிவை வளர்க்க ஆர்வ மிகுதி
அரட்டை அடிக்க மீதிப் பகுதி !
வளரும் நெஞ்சங்கள் வரிசையில்
வருங்கால வாழ்வு சிந்தையில் !
அடிவைக்கும் பாதங்கள் பள்ளிக்கு
படித்திடும் பாடங்கள் வாழ்விற்கு !
இன்றைய காலத்தில் இளைஞர்கள்
நாளைய உலகத்தின் சிற்பிகள் !
வாழ்த்துவோம் வருங்கால வாரிசுகளை
வளர்த்திடுங்கள் வலிவான பாரதமாய் !
பழனி குமார்