விழியோரப் பார்வைகள்
பாரெல்லாம் பவனிவர
கவிஞர்களின் எழுத்து நாக்கில்
வீசுகின்றாய் உனக்குள்ளே
படம் எடுக்கின்றாய் உயிரோட்டமாய்
பார்த்து மகிழும் வண்ணம்
பூரிக்கின்றாய் இமைகளில் ஓரசாமல்
காக்கிறது பல்லக்கு நடவாமல்
இழுக்கிறதடி அங்குமிங்கும் ...!
சுகமான சொப்பனத்தில்
வண்ணத்துப் பூச்சி சுற்றி வர
மகரந்த வாசத்திலே
சுகமே நனவாகிப் போனதில்
சுற்றிப் போட வருகையிலே
கண்ணு படப் போகுதுன்னு
சுற்றம் வெட்டிப் பார்க்குதடி ...!
அமைதியாக உறங்கினாலும்
துயில் எழுப்புகின்றாய் எப்பொழுதும்
அனைவரது பார்வையிலும்
உன் விழிப் பார்வை கரு வண்டோ ?
எனக் கேக்குதடி என் தோட்டத்துப்
பூக்களெல்லாம் விடிய விடிய கண்விழித்துப்
பாதுகாத்து மகிழுதடி விதைக்கின்றாய் மனமெல்லாம் சிலிர்க்குதடி ...!