உன்னால் தானடி ?????????

என் கவிதை வானிலே
உன் காதல் சுவாசமே
உன் நினைவால் உருகவே
நான் மெழுகாய் மாறினேன்

உள்ளத்தில் ஒரு நொடி
முழுவதும் உன் நினைவடி
அழகிய திருவடி
நீ என் கவிதையின் கருவடி

மௌனம் சில நொடி
மரணம் சில நொடி
இரண்டின் நடுவிலும்
எந்தன் மனமடி

என் கவிதையின் நெருக்கடி
தனிமை நெருப்படி
கவிதை சொல்லிடும்
உன் கண்கள் பொய்யடி

விரும்பிடும் மனதினை
துடித்திடும் வயதினை
தடுத்திட வழியில்லை
அதை சொல்லிட மொழியில்லை

எழுதியவர் : ருத்ரன் (26-Jun-13, 6:06 pm)
பார்வை : 167

மேலே