தமிழர்கள் கவனத்திற்கு...

தடுக்கி விழுந்தால் மட்டும் அ… ஆ…
சிரிக்கும் போது மட்டும் இ… ஈ…
சூடு பட்டால் மட்டும் உ… ஊ…
அதட்டும் போது மட்டும் எ… ஏ…
சந்தோசத்தின் போது மட்டும் ஐ…
ஆச்சர்யத்தின் போது மட்டும் ஒ… ஓ…
வக்கனையின் போது மட்டும் ஔ…
விக்களின் போது மட்டும் ஃ…

என்று தமிழ் பேசி
மற்ற நேரம் வேற்று மொழி பேசும்
தமிழர்களிடம் மறக்காமல் சொல்
உன் மொழி
தமிழ் மொழி என்று

நன்றி………..ஒரு தமிழன்..படைப்பு

எழுதியவர் : கவிஞர் கே இனியவன் (27-Jun-13, 6:04 pm)
பார்வை : 112

மேலே