அமெரிக்காவின் உளவு விவகாரம்- சிக்குகிறார் முன்னாள் ஜெனரல்...?!

அமெரிக்க ராணுவத்தில் மிக உயர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் மேஜர் ஜெனரல் ஜேம்ஸ் கார்ல்ரைட் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டார்..ஈரான் அணு உலை
ரியாக்டர்களை முடக்குவதற்காக வைரஸ் அடங்கிய மென்பொருளை தாயாரித்து ஈரான் அணு உலை திட்டத்தை முடக்க நினைத்தது அமெரிக்க அரசு...

ஆனால் வைரஸ் Stuxnet என்ற பெயர் கொண்ட இந்த மென்பொருள் குறித்த விஷயம் வெளியே கசிந்து விட்டதால் அமெரிக்காவினால் ஈரான் அணு உலை திட்டத்தை நிறுத்த முடியவில்லை...இந்த வைரஸ் குறித்த ரகசியங்கள் எவ்வாறு வெளியேறின என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறது அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பு.

ராணுவத்தில் இரண்டாம் நிலை வகித்த ஜேம்ஸ் கார்ல் தற்பொழுது ஓய்வு பெற்று விட்டார் என்றாலும் அவர் மீதான விசாரணை வெகு விரைவில் நடைபெறும் என்று பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது..

இது குறித்து ஒபாமா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த செயல் நாட்டின் அதி உயர் ரகசியங்களை வெளியிடும் செயலாகும், தேச நலனுக்கு எதிரானது...இதில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் தேச நலனுக்கு எதிரானவர்கள் என்று கூறியுள்ளது.

ஏற்கனவே அமெரிக்க இரகசியங்கள வெளியிட்டவர்கள் என்று ஒரு ஆறு பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்திலும் தேச விரோத சட்டத்திலும் அடைத்துள்ளது ஒபாமா அரசு..தற்போது ஸ்னோடென் - ஐ அரும்பாடு பாட்டு தேடிக் கொண்டிருக்கிறது...இன்று முன்னாள் மேஜர் ஜெனரலை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்யப் போகிறார்கள்..

ஆக, என்ன நடந்து கொண்டிருக்கிறது அமெரிக்க அரசில்...? ராணுவத்தில்...!

உலகின் அணைத்து நாடுகளிலும் தனது உளவு அமைப்புகளை ஊடுருவச் செய்வது...அந்தெந்த நாடுகளின் மிக உயர் அதிகாரிகளை தனது ஏஜண்டாக மாற்றுவது...மறுப்பவர்களை தீர்த்து விடுவது என்று நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது அமெரிக்க இராணுவத்தினரே ரகசியங்களை ஏன் வெளியிடுகிறார்கள்...?

அமெரிக்க அரசு உலக அரங்கில் போலீஸ்காரனாக உலா வந்து கொண்டிருக்கும் காலம் முடிவுக்கு வருகிறதா...? வரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்...!

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (28-Jun-13, 2:54 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 64

சிறந்த கட்டுரைகள்

மேலே