புற்றுநோய்
![](https://eluthu.com/images/loading.gif)
வாழும் வயதிதுதான்
வாழ கிட்டவில்லை ...!
தெரிந்து விட்டதெனக்கு
தெரியாத நோயைப் பற்றி...!
எப்பழக்கமும் இல்லை
எப்படி வந்ததெனக்கு ...!
ஆசையாய் இருக்கிறது
ஆயுளும் வாழவேண்டுமென்று ...!
கழிகின்ற நாட்கள்
கணக்குப் போடுகின்றது வாழ்வை...!
மறைந்திருக்கும் என் மகிழ்ச்சி
மரணத்தை முன்கூட்டியே அறிந்ததற்கு ...!