ஒரு நிமிடம் வாசித்துவிட்டு போங்கள்

மதுரை கடச்சனேந்தால் பகுதியில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் கலை, அறிவு விளையாட்டு போட்டிகள் வரும் ஆனி மாதம் 22 & 23 (July 6th & 7th) சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடத்த திட்டமிட்டிருக்கிறோம். அங்கு வாழும் குழந்தைகளின் தனி திறமைகளை கண்டறிந்து, மருத்துவர், பொறியாளர் அல்லாது ஒரு பேச்சாளரை, ஒரு எழுத்தாளரை, ஒரு ஓவியரை, ஒரு பாடகரை, ஒரு நடன கலைஞனை, ஒரு உழவனை, ஒரு நடிகனை, ஒரு திருநங்கையை, ஒரு திருநம்பியை ஒரு விளையாட்டு வீரனை, ஒரு போராளியை இளம் வயதில் கண்டறிந்து இச்சமூகத்தில் அவர்கள் அவர்களாகவே வாழ, வளர வழி வகை செய்ய வேண்டி இம்முயற்சிகளை நாங்கள் மேற்கொள்கிறோம்.

அங்கே குழந்தைகள் மற்றும் சிறார் உட்பட மொத்தம் 80 பேர் வசித்து வருகிறார்கள். 20துக்கும் மேற்பட்ட போட்டிகள் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ஏதேனும் ஒரு பரிசு பொருள் கொடுத்தாக வேண்டும். குழந்தைகள் எங்களிடம் விரும்பி கேட்ட பொருட்கள் - கரிக்கோல் (Pencil), எழுதுகோல் (Pen), வடிவியல் பெட்டி(Geometry Box ), நீர் குப்பி (Water Bottle), வண்ணப்பேழை & தூரிகை (Water color, Sketch & Paint brush), போர்த்த போர்வை, விரித்துபடுக்க பாய், கற்பலகை (Slate), குழந்தைகளுக்கான நாவல், பொதறிவு புத்தகம், மிட்டாய், பொம்மைகள் போன்ற பொருட்கள்தான்.

தோழர்கள் விரும்பினால் தங்களால் இயன்ற பொருட்களை வாங்கி எங்கள் முகவரிக்கு அஞ்சல் செய்யலாம்.

முகவரி :
தமிழ்தாசன்,
2/41, கிழக்கு தெரு,
மீனவர் சங்கம் அருகில்,
மேலமடை,
மதுரை - 625020.
அலைபேசி : +91 9543663443

நிகழ்ச்சி ஒருகிணைப்பு :
நாணல் நண்பர்கள் மற்றும் சமூகநல விரும்பிகள்,
மதுரை.

எழுதியவர் : தமிழ்தாசன் (28-Jun-13, 5:02 pm)
பார்வை : 139

மேலே