கண்ணீர் தேசம்
பிறப்பு இறப்பிற்குமான கண்ணீர்த்துளி
பின்னே வரும் நிழலாக தொடர்கிறது .........
மழலையின்
மதி வளர
கல்வி கூடம் சென்றால்
மதிகெட்டவர் செயலால்
மண்ணாகி சென்றனர்
குளறுபடியால் ஆனது
கும்பகோண தீ விபத்து ......
கடலை ரசித்து
காற்று வாங்கி
மகிழ்ச்சியில் போன
பயணங்களில்
திடீர் மாற்றமானது
கடலும் விதியாக விளையாட
களவாடியது பல இலட்சம் உயிர்களை .....
சுற்றுலா சென்றவர்களை
சுனாமி பெயரால் தாக்கிய கோரம் ....
எங்கு சென்றாலும்
பிணவாடை
பிணைந்து கொண்டது
மனதை ...
பயண வழிகளோ
பரிதாபமாகிறது
விரைவான போக்கால்
விபத்தாகிறது பயணம்
விரைந்திடாத மனிதநேயம்
விளைவாக அமைகிறது
மனித உயிர்களை ...
மனமே அமைதியில்
இல்லையென
இறைவனை தரிசிக்க சென்றால்
இவன் வேறுசாதியென
சண்டையிடுகிறான் ...
ஏழையானவனுக்கு கண்ணீரோ
ஏழ்மையில் தவிக்கிறோமோயென்று ...
பணமானவனுக்கு கண்ணீரோ
பணத்தை காக்க வேண்டுமோயென்று...
இன்னொரு ஜென்மம்
இருந்தால்
நான் பிறக்க வேண்டும்
கண்ணீரே
இல்லாத ஒரு தேசத்தில்...
என்னிடமான அத்தேச(ம் )த்தில்
சுயநலமில்லா மனிதநேயம்
சுயமான சிந்தனை
சுரண்டாத செல்வமாக
சுற்றமும் மனிதஜாதியாக
சுற்றுப்புறத்தின் தோழனாக
சுழலும் உலகில் ஒரே இறைவனாக
சுதந்திரம் பெற்ற பயனாய்
கண்ணீரில்லா தேசமாயிருக்கும்..............