காதலே கசங்குவது ஏன்?

காதலென்ன
காகிதமா?
கைபற்றி கசக்குகிறார்களே...........

காதலென்ன
கைகுட்டையா?
துடைத்துவிட்டு துறக்கிறார்களே..........

நாவினால் பேசினால்
நழுவிவிடும் என்றுதானே
கண்களால் கட்டமைக்கபடுகிறது...........

இதழினால் இயக்கினால்
இளகிவிடும் என்றுதானே
இமைகளால் இயற்றப்படுகின்றது..........

பின்
காதல் கலங்கம்பட
கசங்குவது ஏன்?
=================

எழுதியவர் : பாசகுமார் (29-Jun-13, 6:46 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 101

மேலே