கன்னித்தாய்
கற்பத்தில் எனை வாங்கி
கண்ணுக்குள் மணியாக
காப்பாய் என கனவு கண்டு
கண்களை திறந்தேன் அம்மா ..
கல்யாணம் இல்லா கர்ப்பமா?
களங்கம் எதற்கு என்றெண்ணி
கண்ணிமைக்கும் பொழுதினிலே
கலங்கி போனாயே என் அம்மா ..
கருவிலேயே கலைத்து ,உன் வாலிப
கடனை அடைத்து -என்னை
கழுவிட துடித்தாயே என் அம்மா ..
கலைந்திடுவேன் என்றுணர்ந்தேன்
கருவறையின் பக்கத்தில்
கத்திகளை கண்ட போது, அம்மா..
கற்ப கதவுகள் திறக்கையிலே
கண்களை மூடி கொண்டேன்
கத்துகிறேன் வலியாலே.
கதறுகிறேன் கருவறையில் கேட்கலையா உனக்கு என் அம்மா ?
கத்திக்கு பலியாக்கி
கசிகின்ற குருதியுடன்
குப்பையாய் வீசி விட்டாய்
கருணையில்லையா உனக்கு என் அம்மா ?
கன்னித்தாய் என்றாலும் -என்
கண்களுக்கு நீ தானே தெய்வம்
கருக்கினாயே மலருமுன்னே
கசக்கினாயே பிறக்கும் முன்னே ..ஐயோ என் அம்மா .....