மாற்றங்கள் தேவைதானா

கண்களுக்குத் தெரிகிறது
போதி மரங்கள் இன்று
காணவில்லை புத்தரைத் தான் ...!

தடிகள் காத்திருக்கின்றன
காணவில்லை இன்று
காந்தியடிகளைத்தான் ...!

நோட்டுக்காக ஓட்டு
போடுபவர்கள் உண்டு இன்று
நாட்டுக்காக ஓட்டுப் போடுபவர்கள்
உழைக்கவில்லை உண்மையிலே...!

எங்கு பார்த்தாலும்
அரண்மனை மாளிகைகள் அன்று
அகண்ட நீண்டு உயர்ந்த
கட்டிடங்கள் தான் இன்று ...!
நான்கு வழிச் சாலைகள்
வீடுகள்தான் ஊரெங்கிலும்
சோலைகள் வனங்கள் எங்கே?
தேடுகின்றன கண்கள்...!

கழனிகளைத் தேடுகிறது
மா ஆ க்களெல்லாம்
தொழிற்சாலைகளின் சப்தம் கண்டு
பயந்து கழிவுகளை உணவாக்கியே
மனதுக்குள்ளே அழுகின்றன...!

மதுக்கடைகள் அசையாமல்
பளபளப்பாய் போதிக்கின்றன நெற்றியில்
இருந்தும் போதையில் மனிதர்கள்
''குடி குடியைக் கெடுக்கும் '' என்று ...!

மரங்களை அழித்தும்
விறகுகள் இன்று காணவில்லை
வீடுகளிலெங்கும் வாயுக்
கலன்கள் ஆகிப் போனதாலோ ..?

மேகத்தைக் காண முடியாமல்
விச வாயுக்கள் தடுக்கின்றன
ஒசோனை உடைத்துக் கொண்டு
மழையே நீ வரவேண்டாமென்று ...!

மாக்கள் புரவிகள் எருதுகள் அனைத்தும்
உயிரைப் பணயம் வைத்ததால்
நளினம் கட்டும் வண்டிகள் எல்லாம்
ஒப்பாரி வைக்கின்றதோ
நவீனங்களைக் கண்டு...!
இத்தகைய மாற்றங்கள் தேவைதானா?

எழுதியவர் : ஜெய ராஜரெத்தினம் (29-Jun-13, 9:01 am)
பார்வை : 151

மேலே