நீ கொடுத்த விடுதலை.................

எளிதில் என்னில்
நுழைந்துவிட்டாய்.............
என்னை முழுதாய்
தின்றுவிட்டாய்................

எல்லால் உன்னில்
செய்துவிட்டேன்..................
உன்னில் என்னை
செலுத்திவிட்டேன்...............

உனக்காய் உலகை
சுற்றவிட்டேன்.................
உன்னால் உலகை
வென்றுவிட்டேன்.............

உன்
கண்களால் கைதாகி
குற்றவாளியானேன்.........

உன்
இதயச்சிறைதனில்
அடையுண்டு கிடந்தேன்..............

உன்
மனதின் தீர்ப்பினால்
மரணக் கைதியானேன்..................

உன்
தவனைமுறை
தண்டனைகள் இனித்தன.................

உன்
சிறையெடுப்பு
என்மனதில் ருசித்தன.........................

நீ
கொடுத்துபோன
விடுதலையோ கொன்றன.................
===================

எழுதியவர் : பாசகுமார் (29-Jun-13, 11:16 am)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 66

மேலே