வாழ்வைத் தேர்ந்தெடு
வாழ்க்கை
நின்று நீண்டு எரியும்
சுடர் விளக்கா
இல்லை
தீப்பொறியா?
மனதுக்கு இசைவான
இசையா
இல்லை
ஓலமா?
அழகிய நடனமா
இல்லை
அவசர ஓட்டமா?
கண்ணுக்கினிய ஓவியமா
இல்லை
வெறும் வண்ணத் தீற்றலா?
அழகிய கோலமா
இல்லை
மாவுத் தூறலா?
தெளிவான நீரோடையா
இல்லை
சேற்றுக் குட்டையா?
எல்லோரும் விரும்பும்
கதையா
இல்லை
எல்லோர்க்கும் படிப்பினையா?
தேர்ந்தெடுக்கும் உரிமை
இருக்கிறது.
தேர்ந்தெடுத்தது தவறெனில்
மாற விழைவும்
மாற்றிக் கொள்ளும்
மன உறுதியுமே
நம்மில் பலருக்கில்லை.