இறுதி கவிதை..
கவிதை எழுத நினைத்தால்..,
என் சிந்தை எங்கும்
நீயே நிழலாடுகிறாய்..!
இனி மேல் கவிதை எழுத வேண்டாம்,
என நினைக்கும் முன்,
கண்கள் கண்ணீரால்
ஒரு கவிதையை எழுதி விடுகிறது..!
என் கண்ணோடு, காகிதமும்
நனைத்து விடுகிறது..!
நீயும், என கவிதையும்
எனக்கு வலி தருவதையே
உணர்கிறேன்...!
உணர்த்த பொழுதில் சற்றென்று
வந்து விழுந்த ஒரு துளி நீரை,
முற்றுபுள்ளியாய் மாற்றி வைத்தேன்
உனக்கும், என கவிதைக்கும்
மொத்தமாய் சேர்த்து...!