உணர்வு
இன்னாரின் மகள்
என்றாலும் பெருமை
இவன் எனது மணவாளன்
என்றாலும் இனிமை
பெருமையா இல்லை இனிமையா?
சிலந்தி வலைகளில்
சிக்கி தவிக்கும் சிட்டுக்குருவிகளின்
திருவிளையாடல் தான் காதல்
பெருமிதத்துடன் இனிமையாக
சொல்கிறது ஒரு சிட்டுக்குருவி!
காதலித்து பாருங்கள்!
கனவுகளென்ன? கற்பனைகளும்
கைகூடும் கண்ணெதிரே !
கண்முன்னே தோன்றும்
கதிரவனும் களிப்புட்டும்!
புரியாத புதிர்களும்
புரிந்து போகும்
பெற்றோரின் பாசம் கூட
தங்களின் சுவாசம் என்று!!