நேக்கா மடிச்சா

அரும்பு மீசையில டாவடிச்சேன் நானு.
பிட்டு, அடிப்பது போல் சிரிச்சு நின்னா ஆளு.
அதுல பன்ச்சரான என்னுடைய காலு.
தேளு கொட்டி கூட நகரல சில நாளு.
நான் டாவடிச்சேன் என் கதைய கேளு.

வைடு ஆங்குல் ரோட்டில்
சைடு ஆங்குல் பார்த்து,
பச்சப் புள்ள போல
கொஞ்சி சிரிப்பா.

கோலம் போடும் போது
புள்ளி வைக்கும் சாக்கில்
தேன் மிட்டாய் இதழ
மெல்ல சுழிப்பா.

சத்தமிட்டு தோழிக்கு
மொபையில் நம்பர் குடுப்பா.
மிஸ்டு கால் தந்தா போதும்
கடல நல்லா கொரிப்பா.

லவ் பன்ரேன் ஹஸ்பண்டுனு
தேகம் ஒட்டி நடப்பா.

மயங்கி விழுந்தேன் - ஐயோ
சங்கு எனக்கு ரெடிப்பா.

உப்பு சப்பில்லாத
வாழ்க்கையில நீனு.
காதல் கண்ணீரத்தான்
கலந்து விட்ட தேனு.

ரோட்டோரம் சிந்தும்
அந்த தண்ணீர் தானே நானு.
என்ன குடிச்சு சும்மா
வீணடிச்ச நீனு.

தோட்டா இருந்தா தான்
கன்னு வெடிக்கும்.
நேக்கா மடிச்சா தான்
பொண்ணு சிரிக்கும்.

டேக்க கொடுக்காதே
பாட்டா பறக்கும்.
காதல் போதை தந்து
சிட்டா பறக்கும்.

அவ சாக்கடையில்
தானே - நண்பா காதல் நனைப்பா.
அட தண்ணீர போல்
உன்னில் கழுவி - தன்ன துடைப்பா.

எழுதியவர் : Kavisathish (1-Jul-13, 3:08 pm)
சேர்த்தது : கவி ப்ரியன்
பார்வை : 73

மேலே