$$$$$$ காதல் அழிவதிலை!! $$$$$$

#####என்னுயிர்

உனக்காக வசிக்கையில்

#####உன்னுயிர்

உன்னைவிட்டு விலகிடுமா????



#####கடலுக்குள்

நதிகளெல்லாம் சேர்கையில்

#####கடல்மீன்கள்

நதிநீரை பிரித்திடுமா????



#####இரவொன்றில்

குயில்சத்தம் கேட்கையில்

#####என்னுள்ளம்

குயில்மறந்து தூங்கிடுமா????



#####புல்நுனியில்

பனித்துளிகள் இருக்கையில்

######இரவுவெப்பம்

புல்நுனியை கருக்கிடுமா????



#####பூக்களுக்குள்

தேன்துளிகள் மிதக்கையில்

#####பூக்களையே

தேன்வண்டு உறிஞ்சிடுமா????


#####உன்நெஞ்சில்

என்னன்பு பிறக்கையில்

#####நம்காதல்

பிரிவென்று முடிந்திடுமா????



######உயிருக்குள்

உயிர்பின்னி படர்கையில்

#####உலகத்தில்

உயர்காதல் தோற்றிடுமா????



#####கண்ணுக்குள்

கவிதைகரு உதிக்கையில்

#####காலத்தால்

காதல்கனி அழிந்திடுமா????

###############பாசகுமார்

@@@@@@@@@@@@@@@@

எழுதியவர் : பாசகுமார் (1-Jul-13, 4:50 pm)
சேர்த்தது : சடையன் பெயரன்
பார்வை : 107

மேலே