இன்னும் விடியவில்லை லிமரைக்கூ

குடிசைகள் இன்னும் விடியவில்லை
விழிக்காவிட்டாலும் அரசமரத்து
டீக்கடை மட்டும் ஓயவில்லை ...!

இரண்டு மாச முன்னால பெய்ஞ்சா பயிறு
பாழாப் போன மழை பெஞ்சி
மாசக் கணக்கா காயுது வயிறு ...!

வாழ்ந்து கெட்ட காலத்திலும் கேக்குது பாட்டு
அதக் கேட்டு ஏசும் போது மட்டும்
கெட்டியாக வாயத் தாழ் போட்டு பூட்டு ...!

ரகசியமாய் அழைக்குது லாட்டரி சீட்டு
யோகமாய் வாழணும்னு வேண்டி
ஏமாந்து போனதும் அடிக்குது நோட்டு ...!

எழுதியவர் : தயா (2-Jul-13, 4:06 pm)
பார்வை : 103

மேலே