எழு வெல்ஓடு

விடியற் காலையில் எழுந்திடு
கண் போன்ற கல்வியைக் கற்றிடு
மஞ்சள் மாலையில் ஆற்றலோடு விளையாடு
அரசன படையும் தோற்க வீர நடை போடு ,,,,!

செந்தமிழ் தாயின் மொழியைப் பற்றிடு
பிறர் போற்ற உண்மையாய் உழைத்திடு
எந்த சூழலிலும் வாய்மொழி சத்தியம் பணிந்திடு
பிறை நிலவாய் விண்ணில் வளர்ந்திடு ....!

கற்றவர் என்றும் உயர்ந்தோர்
என்றும் உம் மனதில் வைத்திடு
கல்லாதோரை உம் மனதை விட்டு ஒழித்திடு
குறையைக் கண்டு மற்றவரை நீ பழிக்காதே
முடிந்தால் குறை இன்றி வாழக் கற்றிடு...!

பிறரை நம்பி வாழ என்றைக்கும் எண்ணாதே
பிறர் பொருள் கவரும் எண்ணம் கொள்ளாதே
தன்னையே வென்றிடும் கலையை கற்று மகிழ்ந்திடு
பெரியோர்களை என்றும் வணங்க மறவாதே...!

குற்றம் என்று தெரிந்தாலும் அதனை நினையாதே
குற்றம் இல்லா வாழ்வும் உன்னைத் தேடி உலகை சுற்றாமல் உன் அன்பைத் தேடி சரணடைந்திடுமே
சுற்றம் உன்னை மெச்ச மெய்யும் சிலிர்த்திடுமே
ஊரார் மெச்சிடும் வாழ்வும் உன்னிடம் சேருமே...!

எழுதியவர் : தயா (2-Jul-13, 4:58 pm)
சேர்த்தது : ThayaJ217
பார்வை : 140

மேலே