கற்பனையில் கவிதைப் போட்டி!

அங்கு

ஒரு கவிதைப் போட்டி நடந்தது.

அற்புதமான கவிதைகள்
அநேகம்

அங்கு அருமையாய் வாசிக்கப் பட்டன!

கவிதைகளின் அருமை பெருமைகளில்

அங்கிருந்தோர் அகமகிழ்ந்து போயினர்!!

அவ்வமயம் ஒரு கவி அங்குவந்து

முழங்கும் மேடையில் இருகரமும் வைத்து

வைத்தகண் வாங்காமல்

எல்லோரையும் அன்பு ததும்ப நோக்கி

வணங்கிவிட்டு

தன் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார்.

அவையிலிருந்தோர்

ஒன்றும் புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்தனர்.

நடுவரும் பார்த்தார்!!!

ஒருநிமிடம் தடுமாறிப் போனாலும்

மறுநிமிடம் சுதாரித்துக் கொண்டு

எழுந்து மேடைக்கு வந்து நின்றார்!!

ஒன்றும் பேசாது வணங்கிவிட்டுச் சென்ற கவியை

ஒருமுறை வணங்கி

தன் பேச்சினைத் துவக்கினார்.

இத்தகைய உன்மத்த கவிதையை

நான் ஒருபோதும் கேட்டதில்லை.

ஆகா...ஆனந்தம்...ஆனந்தம்!

அமைதிக் கவிதை,

அற்புதம்...அற்புதம்!!!

அதனினும் சிறந்த கவிதை ஏது?

அதுவே சிறந்த கவிதை

என்று சொல்லித் தன் இருக்கையில் அமர்ந்தார்!

இது ஒரு கற்பனையே!!!!!!!!

பாலு குருசுவாமி.

எழுதியவர் : பாலு குருசுவாமி. (3-Jul-13, 5:30 pm)
சேர்த்தது : Baluguruswamy
பார்வை : 140

மேலே