ஈரம்வீரம் எங்கேபோனது?

வீரம் காத்த பூமியோ!
ஈரமுள்ள மண்ணிதோ!
வீரம் ஒழிந்து போனதோ!!
ஈரம் காய்ந்தும் அழிந்ததோ!

ஆயிரம் பேர் நடமாடிடும்
காயும் பகல் பொழுதிலும்
தாலியறுத்து ஓடுவான்
தடுக்கத்தான் துணிவில்லை!

பேருந்திலேயே பெண்ணினை
பேயர்கூடி சிதைக்கையில்
உடனிருந்த மனிதற்கும்
உதிரம் கொதிக்கவில்லையே!

வீதியிலோர் மனிதனை
வெட்டிவெட்டிக் கொல்கிறான்,
வேடிக்கைதான் பார்க்கிறோம்
வேறென்ன செய்கிறோம்?

ஆயிரம்பபேர் இருந்தாலும்
அஞ்சவில்லை சண்டாளன்
அஞ்சி அஞ்சி ஓடுறோம்.
அவன் துணியச் செய்கிறோம்.

ஏழையாக வாழலாம்.
கோழையாதல் கேவலம்.
ஆளை எங்கே தேடுவொம்.
சேலை கட்டா வீரனாம்.

கொ.பெ.பி.அய்யா.

எழுதியவர் : கொ.பெ.பி.அய்யா. (4-Jul-13, 12:48 pm)
பார்வை : 108

மேலே