வெளிச்சத்தில் நிழலுக்கு என்ன தேவை ...???
இத்தனை நேரம்
என்னைத் தொடர்ந்த
நிழல்
இருட்டில் மட்டும்
எங்கே போனது?
இருட்டில் எங்கோ
ஒளிந்து கொண்டு
வெளிச்சத்தில் நிழலின்
வேலை என்ன ?
பட்டப் பகலில்
பயணத் துணை
யார் கேட்டது?
இத்தனை நேரம்
என்னைத் தொடர்ந்த நிழல்
இருட்டில் மட்டும்
எங்கே போனது?
வெளிச்சத்தில் சேவையும் ..
இருட்டில் விடுமுறையும் ...
எடுக்க நீ என்ன அலுவலக ..
உத்தியோகத்தரா ...???
என்னோடு இருந்து ..
எனக்கே இடையிடையில் ..
கழுத்தறுக்கும் நீ ...
எப்படி என் நிழல் என்பேன் ..??
ஓ அதற்காக தான் நீ ...
முகம் காட்டாமல் ..
இருளாய் இருக்கிறாயா ...???