கவிதை சாசனம்

முகவரி தேடி ஒரு பயணம்
என் கவிதை வானிலே
விதை தொடங்கும்
விருட்சமாய் மாறும் நாள் வரும்

ஒரு தவழும் மழலை போலே
கவிதை உலகில் நானும்
பவனி வரும் ஆசை
தமிழை செய்கிறேன் பூஜை

கவிதை மூலம் உலகின் அழகை
எடுத்து சொல்லிடும் ஆசை உண்டு
ரசிக்கும் மனதிடம் வசிக்கும் அளவு
கவிதை எழுதிட வேண்டும்

தினம் ஒரு கவிதை
படைத்திடும் மனதினை
ரசித்திடும் ரசிகனை
நாளும் பெற்றிட வேண்டும்

என் ஆசை என்னவென்றால்
தமிழ் வாசிக்க தெரிந்த தமிழனுக்கும்
கவிதை அர்த்தம் புரிந்திட வேண்டும்
அவனுக்கும் பிடித்திட வேண்டும்

கவிதையிலும் புரட்சி சாத்தியம்
நிருபிக்கும் ஒரு முயற்சி மாத்திரம்
வெல்வேன் இது சத்தியம்
உலகை ரசிக்க ஒருதரம்

எழுதியவர் : ருத்ரன் (4-Jul-13, 3:56 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 96

மேலே